/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விவசாயிகளுக்கு மின்இணைப்புகளை வரும் மார்ச் 31க்குள் வழங்கி விட வேண்டிய கட்டாயம்

ADDED : மார் 10, 2025 05:13 AM

தமிழகத்தில் விவசாய மின்இணைப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. முன்னுரிமை கோருவோர், தட்கல் முறையில் விண்ணப்பிப்போர் கட்டணம் செலுத்தி பெறுகின்றனர்.
இவ்வகையில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்குவதில் இலக்கு நிர்ணயித்து அவற்றை எட்டும் வகையில் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.
கடந்தாண்டு(2023 - 24) மார்ச் 31 வரைக்கும் நிலுவையில் இருந்த 276 மின்இணைப்புகளை வழங்க இந்தாண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து அதிகாரிகள் விண்ணப்பங்களை பெற்று பரிசீலித்து இணைப்பு வழங்கி வந்தனர்.
இதன்படி இலவச இணைப்பு 37 பேருக்கும், ரூ.25 ஆயிரம் கட்டணத்தில் 13 பேர், ரூ.50 ஆயிரம் கட்டணம் செலுத்தியோர் 7 பேர், தாட்கோ அமைப்பின் மூலம் 8 பேர், ஆதரவற்றோர், விதவை, முன்னாள் ராணுவத்தினர் என முன்னுரிமை பட்டியலில் உள்ளோர் 17 பேர், தட்கல் முறையில் 159 பேருக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மீதியுள்ளோருக்கும் மின்இணைப்பு வழங்குவதில் அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.
இந்த இணைப்புகளை வரும் மார்ச் 31க்குள் வழங்கி விட வேண்டிய கட்டாயம் உள்ளதால் மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் மின்கம்பங்களை நடுவது, மின்கம்பிகளை இழுப்பது, புதிய டிரான்ஸ்பார்மர்களை பொருத்துவது என பம்பரமாக சுழன்று வருகின்றனர்.