/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குவாரிக்கு தடையில்லா சான்று வழங்க விவசாயிகள் எதிர்ப்பு
/
குவாரிக்கு தடையில்லா சான்று வழங்க விவசாயிகள் எதிர்ப்பு
குவாரிக்கு தடையில்லா சான்று வழங்க விவசாயிகள் எதிர்ப்பு
குவாரிக்கு தடையில்லா சான்று வழங்க விவசாயிகள் எதிர்ப்பு
ADDED : டிச 08, 2024 04:46 AM
உசிலம்பட்டி : 58 கிராம தொட்டிப்பாலப் பகுதியில் கல்குவாரிக்கு தடையில்லாச் சான்று வழங்கக் கூடாது என குண்டாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் நிறைமதியிடம் 58 கிராம பாசன விவசாயிகள் சங்க செயலாளர் சிவப்பிரகாசம் கோரிக்கை மனு கொடுத்தார்.
அதில், 58 கிராம பாசன கால்வாயில் அமைந்துள்ள தொட்டிப்பாலம் அருகே கல்குவாரி செயல்பட்டு வந்தது.
குவாரியில் வைக்கப்படும் வெடிகளால், தொட்டிப்பாலத்திற்கு சேதம் ஏற்படும் என விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் மூடப்பட்டது. தற்போது குவாரியில் நீதிமன்ற உத்தரவுபடி, அண்ணா பல்கலை நிபுணர்கள் டிச. 4 முதல் வெடிவைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளுக்கு தெரிவிக்காமல், ஆய்வு செய்ய வேண்டிய காரணம் என்ன. சோதனை முடிவுகள் எப்படி இருந்தாலும், தொட்டிப்பாலம் பகுதியில் எவ்வித குவாரியும் செயல்பட அனுமதிக்கக்கூடாது என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
58 கிராம பாசன கால்வாயை கவனித்துவரும் குண்டாறு வடிநிலக்கோட்டத்தில் இருந்து தடையில்லா சான்று வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.