/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெரியாறு அணைக்கு எதிரான காட்சிகளை அகற்ற போராட்டம் எம்புரான் படத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு

ADDED : ஏப் 02, 2025 03:40 AM

உசிலம்பட்டி: எம்புரான் திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக சித்தரிக்கப்பட்ட காட்சிகளை அகற்ற வலியுறுத்தி, படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் ஆகியோருக்கு எதிர்ப்பு தெரிவித்து உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சமீபத்தில் கோபாலன் தயாரிப்பில், ப்ரித்திவிராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் திரைப்படத்தில், முல்லை பெரியாறு அணையால் பாதிப்பு ஏற்படும், அதனை இடிக்க வேண்டும் என உண்மைக்கு புறம்பான காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரச்னையை தூண்டும் வண்ணம் உள்ள காட்சிகள், வசனங்களை நீக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், உசிலம்பட்டி 58 கால்வாய் பாசன சங்கம், மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
ஆர்ப்பாட்டத்தின் போது, படத் தயாரிப்பாளர் கோபாலன், இயக்குநர் ப்ரித்திவிராஜ், நடிகர் மோகன்லால் உருவ படங்களை செருப்பால் அடித்தும், காலில் போட்டு மிதித்தும் கிழித்தனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கிழித்த படங்களை பறிமுதல் செய்தனர்.