/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வரத்து கால்வாய், கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் குறைதீர் கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்
/
வரத்து கால்வாய், கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் குறைதீர் கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்
வரத்து கால்வாய், கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் குறைதீர் கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்
வரத்து கால்வாய், கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள் குறைதீர் கூட்டத்தில் குமுறிய விவசாயிகள்
ADDED : டிச 18, 2024 05:27 AM
திருப்பரங்குன்றம், : 'நீர்வரத்து கால்வாய், கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என திருப்பரங்குன்றம் விவசாயிகள் குமுறினர்.
திருப்பரங்குன்றம் வட்டார விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கவிதா தலைமையில் நடந்தது.விவசாயிகள் மாரிச்சாமி, மகேந்திரன், சிவராமன், பாலமுருகன், அபேல்மூர்த்தி, குரும்பன், ஜெயக்குமார் பங்கேற்றனர்.
செட்டிகுளம் ஊரணிக்கு வைகை அணை தண்ணீர் செல்லும் கால்வாய் துார்வாரப்படுவது தண்ணீர் செல்வதற்கா, அதில் சாலை அமைக்கவா. சாலை அமைப்பதாக இருந்தால் வழக்கு தொடர்வோம்.
கண்மாய்களுக்கு வைகை அணை நீர் செல்லும் ஓடை இருக்கிறதா, ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதா என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டதற்கு, ஓடை இருக்கிறது, விவரங்களுக்கு தாசில்தாரை அணுகவும் என பதில் கிடைத்தது. மூன்று மாதங்கள் ஆகியும் தாசில்தாரிடமிருந்து பதில் இல்லை.
வேடர் புளியங்குளத்தில் புறம்போக்கு நித்தை பலர் ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்ற வேண்டும். திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேறும் மேட்டு வாய்க்காலை முழுவதுமாக ஆக்கிரமித்து பிளாட் போட்டு விற்பனை செய்துள்ளனர்.
நெருக்கடி நேரங்களில் மாடக்குளம் தண்ணீரை வெளியேற்றும் கோர வாய்க்காலை எல்லீஸ் நகர் பகுதியில் சாலை அமைப்பதற்காக மூடிவிட்டனர். இதனால் கண்மாயில் இருந்து தண்ணீர் வெளியேற முடியாமல் நேரு நகர் பகுதியில் தேங்கி நிற்கிறது. மாடக்குளம் கண்மாய் நடுமடை பகுதி வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். கிருதுமால் நதியில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.
வைகை அணையில் திறக்கும் தண்ணீர் திருமங்கலம் கால்வாய் மூலம் மாவிலிபட்டி வரை வருகிறது. அதனை தென்பழஞ்சி, சாக்கிலிபட்டி, வேடர் புளியங்குளம் உள்ளிட்ட மானாவாரி கண்மாய்களுக்கும் கொண்டுவர வேண்டும், என்றனர்.