/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கழிவுநீரால் மாசுபட்ட நிலத்தடி நீர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்

ADDED : பிப் 13, 2025 05:36 AM
திருப்பரங்குன்றம்: 'திருநகர் புளியங்குளம் கண்மாயில் தேங்கிய கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளது' என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறினர்.
திருப்பரங்குன்றம் தாலுகா விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் கவிதா தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள் சிவராமன், பாண்டியன், சின்னையா, அழகு உள்பட பலர் பங்கேற்றனர்.
விவசாயிகள் பேசியதாவது: இதுவரை கொடுத்த மனுக்களுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை. நீர்வரத்து கால்வாய்கள், கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் விவசாயம் முற்றிலும் தடைபட்டு விடும்.
மானாவாரி கண்மாய்களில் மணல் அள்ள அனுமதி அளிக்கக் கூடாது. ஏற்கனவே மணல் அள்ளப்பட்டதால் குண்டும் குழியுமாக உள்ளன. அதிக மழை பெய்தால் மட்டுமே இக்கண்மாய்கள் நிரம்பும். சில ஆண்டுகளாக மானாவாரி கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன. மண் அள்ள அனுமதித்தால் இவற்றை நம்பியுள்ள நிலங்களில் விவசாயம் பாதிக்கும்.
தோப்பூர் ஊருணி ஆக்கிரமிப்பை அகற்றவும் நடவடிக்கை தேவை. புளியங்குளம் கண்மாயில் பல ஆண்டுகளாக கழிவு நீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் சுற்றியுள்ள குடியிருப்புகளில் நிலத்தடி நீர் மாசுபட்டுவிட்டது. கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வார வேண்டும் என்றனர்.