/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆடிப்பட்ட விதைப்புக்கு விவசாயிகள் தயக்கம்
/
ஆடிப்பட்ட விதைப்புக்கு விவசாயிகள் தயக்கம்
ADDED : ஆக 04, 2025 04:52 AM

பேரையூர்: பேரையூர் பகுதியில் மழைக்கான அறிகுறி இல்லாததால் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் ஆடி பட்டம் விதைப்புக்கு விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர்.
ஜூலை முதல் செப்டம்பர் வரை பெய்யும் மழையை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் சிறுதானியம், பயிர் வகைகள், எண்ணெய் வித்துகள் சாகுபடி செய்வர். ஆடி மாதம் விதைப்பு செய்தால் தொடர்ந்து கிடைக்கும் வடகிழக்கு பருவ மழையால் பயிர்கள் வளர்ந்து சாகுபடி கைகொடுக்கும்.
சில ஆண்டுகளாக பயிர் வளர்ச்சிக்கு ஏற்றபடி மழை இல்லை. சில நாட்களில் கூடுதலான மழை, பல நாட்களுக்கு மழை இன்மை போன்றவற்றால் விதைத்த பயிர்களின் வளர்ச்சி பாதித்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது. மானாவாரி விவசாயிகள் பலர் தங்கள் நிலத்தை உழவு செய்து விதைக்க தயார் நிலையில் வைத்துள்ளனர். ஆனால் விதைப்புக்கேற்ற மழை அறிகுறி இல்லை. ஒருவேளை மழை பெய்தாலும், தொடர் மழை இருந்தால் மட்டுமே பயிர் வளர்வது சாத்தியமாகும். எனவே மழை கை கொடுக்குமா கைவிடுமா என்ற குழப்பத்தில் ஆடி விதைப்புக்கு விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர்.