/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காப்பீட்டுத் தொகை பெற அலையும் விவசாயிகள்
/
காப்பீட்டுத் தொகை பெற அலையும் விவசாயிகள்
ADDED : ஜூலை 02, 2025 06:31 AM

பேரையூர் : பேரையூர் பகுதியில் பயிர் காப்பீட்டுத் தொகை கிடைக்குமோ, கிடைக்காதோ என வேளாண்துறை அலுவலகத்திற்கு விவசாயிகள் நடையாய் நடந்து, அலைந்து திரிகின்றனர்.
இப்பகுதியில் கடந்தாண்டு ஆடிப்பட்டத்தில் பெய்த மழையை பயன்படுத்தி மக்காச்சோளம், பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. தொடர்ந்து மழை இல்லாததால் பயிர்கள் கருகின.
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர்.
இந்த பயிர் காப்பீட்டுக்கான இழப்பீட்டுத் தொகை, சேடப்பட்டி ஒன்றியத்தில் காப்பீடு செய்தவர்களின் வங்கிக் கணக்கில் ஒரு வாரத்திற்கு முன்பு பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.
அருகேயுள்ள டி. கல்லுப்பட்டி ஒன்றிய விவசாயிகளுக்கு தொகை எதுவும் வரவு வைக்கப்படாததால் விவசாயிகள் தனித்தனியாக வேளாண்துறை அலுவலகத்திற்கு சென்று பாதித்த பருத்தி, மக்காச்சோளம் பயிருக்கு பணம் கிடைக்குமோ, கிடைக்காதோ என விசாரிக்கின்றனர்.