/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பயிர்கள் சேதத்தால் விவசாயிகள் சோகம்
/
பயிர்கள் சேதத்தால் விவசாயிகள் சோகம்
ADDED : அக் 25, 2025 04:32 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரம், இரும்பாடி, நாச்சிகுளம் பகுதிகளில் தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
விவசாயி குமாரசாமி கூறியதாவது: பல ஏக்கர் நிலங்களில் நெல் அறுவடைக்கு தயாரான நிலையில் தொடர் மழை பெய்தது. இதில் பல இடங்களில் நெற்பயிர் தரையில் சாய்ந்துள்ளன. மழை தொடர்ந்து பெய்வதால் பல இடங்களில் நெல்மணிகள் முளைக்கத் தொடங்கி விட்டன.
கால்வாய்கள் துார்வாரப்படாததால் மழைநீர் வடியாமல் வயலிலேயே தேங்கி பயிர்கள் அழுகும் நிலை உள்ளது. இதனால் ரூ. பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இயந்திர அறுவடை செய்தாலும் அறுப்பு கூலியாவது மிஞ்சுமா என்ற சந்தேகம் எழுகிறது. மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வேளாண் உதவி இயக்குனர் பாண்டி கூறியதாவது: இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம், தென்கரை, நாச்சிகுளம் பகுதிகளில் சேதத்தை அளவிடும் பணி நடக்கிறது. தண்ணீரில் சாய்ந்துள்ள பயிரையும், முளைவிட்ட பயிர்களையும் தனித்தனியாக கணக்கெடுக்கிறோம். 33 சதவீதத்திற்கு மேல் சேதமான பயிர்கள் குறித்த விவரத்தை அளித்து அரசு நிவாரணத்திற்கு பரிந்துரைத்துள்ளோம், என்றார்.

