/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நெல்லுக்கு மாறும் விவசாயிகள் பயறு, பருத்தி பரப்பு குறைந்தது
/
நெல்லுக்கு மாறும் விவசாயிகள் பயறு, பருத்தி பரப்பு குறைந்தது
நெல்லுக்கு மாறும் விவசாயிகள் பயறு, பருத்தி பரப்பு குறைந்தது
நெல்லுக்கு மாறும் விவசாயிகள் பயறு, பருத்தி பரப்பு குறைந்தது
ADDED : மார் 30, 2025 03:24 AM
மதுரை : ஜூலை 4 ல் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்டத்தில் நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்து பயறு, பருத்தி, எண்ணெய் வித்துகளின் பரப்பளவு குறைந்துள்ளது.
மாவட்டத்தின் ஆண்டு சாகுபடி நெல் பரப்பு 43 ஆயிரத்து 550 எக்டேராக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் விளைச்சல் 55ஆயிரத்து 626 எக்டேராக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டை விடவும் இந்தாண்டு இலக்கை விடவும் 12 ஆயிரம் எக்டேர் பரப்பிற்கு மேல் அதிகரித்துள்ளது. அதேபோல சிறுதானியங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட 32 ஆயிரத்து 923 எக்டேரைத் தாண்டி 34 ஆயிரத்து 783 எக்டேராக அதிகரித்து உற்பத்தித் திறன் கூடியுள்ளது.
முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நெல், சிறுதானியங்களின் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 11 ஆயிரதது 360 எக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட உளுந்து, துவரை, பாசிப்பருப்பு போன்ற பயறு வகைகளுக்கு 6659 எக்டேரே உற்பத்தியாகியுள்ளது. இது கடந்தாண்டை விடவும் 1800 எக்டேர் பரப்பு குறைந்துள்ளது. எண்ணெய் வித்துகள் பரப்பளவு இலக்கை விட 1477 எக்டேர் அளவும் பருத்தி 6397 எக்டேர் பரப்பளவும் கரும்பும் 337 எக்டேர் பரப்பும் குறைந்துள்ளது.
வேளாண் அதிகாரிகள் கூறுகையில்,''நெல் சாகுபடி பரப்பு அதிகரித்து கொண்டே வருவதால் மாற்றுப்பயிருக்கு செல்லுமாறு கலெக்டர் சங்கீதாவும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளிடம் தெரிவித்து வருகிறார். 3ம் சீசனில் நெல்லுக்கு பதிலாக உளுந்து, பாசிப்பயறு சாகுபடி செய்தால் மண்வளம் அதிகரிக்கும். அடுத்து நெல் சாகுபடி செய்யும் போது மகசூல் கூடும். விவசாயிகள் இதை புரிந்து கொள்ள வேண்டும்'' என்றனர்.