/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விவசாயிகளின் ஓட்டு இனி தி.மு.க.,விற்கு விழாது
/
விவசாயிகளின் ஓட்டு இனி தி.மு.க.,விற்கு விழாது
ADDED : அக் 26, 2025 04:39 AM
மதுரை: ''டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்னையை வெளிக்கொணர்ந்தது முன்னாள் முதல்வர் பழனிசாமி தான். விவசாயிகளின் ஓட்டு இனி தி.மு.க.,விற்கு விழாது'' என மதுரையில் சட்டசபை எதிர்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில் 58ம் கால்வாய், திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி மதுரை கலெக்டர் பிரவீன்குமாரிடம் கோரிக்கை வைத்தபின் உதயகுமார் நிருபர் களிடம் கூறியதாவது:
பழனிசாமி ஆட்சிக்காலத்தில் மூன்று முறை உசிலம்பட்டி 58ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தற்போது வைகை அணையில் உபரி நீர் உள்ளதால் 58ம் கால்வாய், திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு தண்ணீரை திறந்து விட வேண்டும்.
டெல்டாவில் நெல்லின் ஈரப்பதம் குறித்து விவாதம் நடக்கிறது. ரோட்டில் நெல்மணிகள் கொட்டப் பட்டுள்ளது. நெல்லில் 22 சதவீத ஈரப்பதம் இருந்தால் நெல் கொள்முதல் மையங்களில் எடுக்க மாட்டோம் என்று அரசு சொல்கிறது. தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 32 இடங்களில் ஆய்வு செய்த பழனிசாமி, இப்பிரச்னையை வெளியே கொண்டு வந்ததால் தான் மத்திய குழு ஆய்வு செய்ய வந்தது.
டெல்டா பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் திட்டமிடல் இல்லை, ஆட்கள் இல்லை, தளவாடங்கள் இல்லை என்பது பழனி சாமி மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதை திசை திருப்பி மடைமாற்றம் செய்யும் வகையில் துணை முதல்வர் உதயநிதி பேசியுள்ளார். வரும் தேர்தலில் ஒரு விவசாயியின் ஓட்டு கூட தி.மு.க.,விற்கு விழாது. அந்தளவிற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ள நிலையில் டெல்டா மாவட்டக் காரரான டி.டி.வி., தின கரன் நல்லது செய்யாமல் போகாத ஊருக்கு வழி சொல்கிறார். கட்சியிலும், கூட்டணியிலும் யார் யாரை சேர்க்க வேண்டு மென தினகரனிடம் யாராவது கேட்டார்களா. காலாவதி மருந்தை சாப்பிட்டால் அதுவே விஷமாகி விடும். அதுபோல காலாவதியான தலைவராக தினகரன் உள்ளார் என்றார்.

