நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : கள்ளிக்குடி தாலுகா திருமால் கிராமத்தில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கான கருத்துக்கணிப்பு கூட்டம் 40 நாட்களுக்கு முன்பு அப்போதைய ஆர்.டி.ஓ., சாந்தி தலைமையில் நடந்தது.
அப்போது கல்குவாரி அமைக்க எதிர்ப்பு, ஆதரவு தெரிவித்து பொது மக்கள் கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் தங்கள் பகுதி விவசாய நீராதாரம் பாதிக்கும், சாகுபடி பாதிக்கும் என குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருமங்கலத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதில் பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்.

