/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோவில்பாப்பாகுடியில் உற்ஸவம், எருதுகட்டு விழா
/
கோவில்பாப்பாகுடியில் உற்ஸவம், எருதுகட்டு விழா
ADDED : பிப் 06, 2026 06:32 AM

அலங்காநல்லுார்: மதுரை கோவில்பாப்பாகுடியில் கிராம 13 கரைக்காரர்கள், சாமியாடி, ஆரப்பாளையம் பூஜாரி வகையறாக்கள், கிராம மக்கள் சார்பில் சோனை கருப்பணசாமி கோயில் உற்ஸவம் 3 நாட்கள் நடந்தது.
பிப்.3 கிழக்கு அய்யனார் கோயிலில் இருந்து அம்மச்சி அம்மன் எழுந்தருளல், பிப்.4ல் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு கிராமத்தில் இருந்து ஆரப்பாளையத்திற்கு தண்டியல் (சக்கரம்) புறப்பாடு நடந்தது. இரவு ஆரப்பாளையம் பூஜாரிகள் வீட்டில் இருந்து சோனை, கருப்பண சுவாமி, பரிவார தெய்வங்களை இளைஞர்கள் சுமந்து சென்றனர்.
திருக்கண் மண்டபத்தில் அபிஷேகம், பூஜை நடந்தது. கோயிலில் சுவாமிகள் எழுந்தருளி அருள் பாலித்தனர். இரவு மாவிளக்கு பூஜை தீபாராதனைக்குப் பின் சுவாமிகள் கோயில் சென்றடைந்தார்.
நேற்று பெரிய கண்மாய்க்கு உயிர் நீத்த அல்லங்காத்தனுக்கு உணவு படைத்தல், செண்பகமூர்த்தி அய்யனார் கோயிலில் பொங்கல் வைத்தலைத் தொடர்ந்து, கிராம கோவில் மாடு, 13 கரைகாரர்களின் 13 மாடுகள் பங்கேற்ற எருதுகட்டு விழா நடந்தது. தினமும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

