ADDED : பிப் 06, 2026 06:23 AM

திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் கே.கே. உலக சிலம்ப கூட்டமைப்பு சார்பில் சர்வதேச ஓப்பன் சாம்பியன்ஷிப் சிலம்ப போட்டிகள் நடந்தன. இந்தியா, இலங்கை, மலேசியாவை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் வெற்றி பெற்ற மதுரை கே.கே.ஸ்போர்ட்ஸ் அகாடமி வீரர்கள் : ஒற்றை கம்பு பிரிவில் 5 -- -6 வயது பிரிவில் தாரா, அல்யசிதா முதல் பரிசு, காருண்யாஸ்ரீ, வெற்றி செழியன், மிதுன்ராஜ் 2ம் பரிசு வென்றனர். 7 - -8வயது பிரிவில் முகமது அஜ்வா, சித்தார்த் அய்யனார், கவினேஷ், கிஷாந்த் அல்சித் முதல் பரிசு, ரிந்தியா, சஞ்சனா, ஜாசிரா, ஜவியா, வைஷ்ணவி, சவீர் அகமத் 2ம் பரிசு வென்றனர்.
9- - 10 வயது பிரிவில் சங்கரநாரயணன், சாய் சாத்விக், அஷ்மிதா, தீபீகா முதல் பரிசு, கிருத்திகா, தனிஷ்கா, சாய் சந்தோஷ், ஆதேஷ், தஷ்வின், சாரிகாஸ்ரீ, கீர்த்தனா, அப்னா 2ம் பரிசு வென்றனர். 11-- 12 வயது பிரிவில் லக் ஷனா, நிவர்த்தன், விஷாலினி, சசித்தா, வீரபத்ரன், சூரியா, விமல்ராஜ், அகிலேஷ்வரன் முதல் பரிசு, அகர்னேஷ், பிரவீன் 2ம் பரிசு வென்றனர். 13- - 14 வயது பிரிவில் பிரித்திஹாசினி, ரமேஷ் முதல் பரிசு, ஜாபர், ராஜலோக்ஷினி 2ம் பரிசு வென்றனர். 15- - 16 வயது பிரிவில் திவாகர் 2ம் பரிசு வென்றார்.
இரட்டை கம்பு பிரிவில் 7- - 8 வயது பிரிவில் தக்ஷித், கவின்பாலாஜி முதல் பரிசு வென்றனர். 9- - 12 வயது பிரிவில் சாய் தக்சன், ஸ்ரீராம், கிருஷ்மிகா, பிரித்திகா முதல் பரிசு வென்றனர். மான்கொம்பு பிரிவில் 9- - 11 வயது பிரிவில் நிவர்த்தன், மரியா ஆல்த்தியா, தனுஸ்ரீ முதல் பரிசு வென்றனர். தொடுமுறை பிரிவில் 9- - 13 வயது பிரிவில் சாய் தக் ஷன், சேசாந்த், சர்வேஷ் திவாகர் முதல் பரிசு வென்றனர். பரிசு பெற்றவர்களை கூட்டமைப்பு நிறுவன தலைவர் கார்த்திக், பயிற்சியாளர்கள் வீரவேல், முனீஸ்வரன், வனிதா பாராட்டினர்.

