sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பண்டிகை கால  சிறப்பு ரயில்கள்

/

பண்டிகை கால  சிறப்பு ரயில்கள்

பண்டிகை கால  சிறப்பு ரயில்கள்

பண்டிகை கால  சிறப்பு ரயில்கள்


ADDED : ஜன 12, 2025 04:56 AM

Google News

ADDED : ஜன 12, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: பொங்கல், தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஜன. 19 மதியம் 3:30க்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06104) பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலுார் போர்ட், விழுப்புரம், மேல்மருவத்துார், செங்கல்பட்டு வழியாக மறுநாள் அதிகாலை 3:30க்கு தாம்பரம் செல்லும்.

9 ஏ.சி., மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், ஒரு ஏ.சி., மூன்றடுக்கு 'எகனாமி' படுக்கை வசதிப் பெட்டி, 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி, ஒரு சரக்குப் பெட்டியுடன் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு துவங்கியது.

'மெமு' ரயில்: பிப். 5 முதல் 14 வரை (ஞாயிறு தவிர்த்து) காலை 9:35க்கு கோவையில் இருந்து புறப்படும் 8 பெட்டிகள் கொண்ட 'மெமு' முன்பதிவில்லா சிறப்பு ரயில் (06106) மதியம் 1:10க்கு திண்டுக்கல் வரும். மறுமார்க்கத்தில் மதியம் 2:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06107) மாலை 5:50க்கு கோவை செல்லும்.

இவ்விரு ரயில்கள் ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனுார் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.






      Dinamalar
      Follow us