ADDED : செப் 17, 2026 06:51 PM
மதுரை: மதுரையில் நேற்று 38 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 86 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா, எச்.1 என்.1 தொற்று பதிவாகவில்லை.
டாக்டர்கள் கூறியதாவது: டெங்கு கொசுக்கள் இந்த பருவத்தில் எளிதாக இனப்பெருக்கம் செய்யும். மழை இல்லாவிட்டாலும் வீடுகளில் பிளாஸ்டிக் டிரம்களில் தண்ணீரை சேகரித்து, முழுமையாக மூடாவிட்டால் தண்ணீர் குறையும் போது டெங்கு கொசுக்கள் எளிதில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். எனவே டிரம்களை காற்று புகாத வகையில் சரியாக மூடுவது அவசியம் என்றனர்.
சுகாதாரத்துறை சார்பில் கொசுப்புழு ஒழிப்பாளர்கள் வீட்டு டிரம்களில் கொசுப்புழுக்கள் இருக்கிறதா என கண்டறிந்து மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
