நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி கள்ளர் தெருவை சேர்ந்தவர் தினேஷ்பாண்டி 33. இவரது மனைவி வள்ளி. இருவரும் மகாராஷ்டிராவில் முறுக்கு வியாபாரம் செய்கின்றனர்.
கடந்த மாதம் உறவினர் இறப்பிற்காக உசிலம்பட்டி வந்தனர். டிச.15ல் மதுரை ரோட்டில் உள்ள தனியார் பாரில் பணியாளர்களுக்கும், தினேஷ்பாண்டிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பார் ஊழியர்கள் தகவல்படி அங்கு வந்த போலீசார் சமரசம் செய்தபோதும் வாக்குவாதம் நீடித்தது. இதில் தனது கணவர் தாக்கப்பட்டதில் தாடை எலும்பு முறிந்ததாக கூறி வள்ளி புகார் அளித்தார். போலீசார் நடவடிக்கை எடுக்காததால் நேற்று காலை உசிலம்பட்டியில் தனி ஆளாக போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் சமரசம் செய்தனர்.