/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குப்பையை வீசினால் அபராதம்: கண்காணிக்கும் மாநகராட்சி
/
குப்பையை வீசினால் அபராதம்: கண்காணிக்கும் மாநகராட்சி
குப்பையை வீசினால் அபராதம்: கண்காணிக்கும் மாநகராட்சி
குப்பையை வீசினால் அபராதம்: கண்காணிக்கும் மாநகராட்சி
ADDED : நவ 19, 2024 05:39 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் குப்பை பாதிப்பு இடங்களாக 386 கண்டறியப்பட்டு அவற்றை குறைக்கும் நடவடிக்கையை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
மாநகராட்சியில் நாள் ஒன்றுக்கு 800 முதல் 900 டன் குப்பை சேருகிறது. இவை வெள்ளக்கல் உரக்கிடங்கிற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படுகின்றன. வார்டுகளுக்குள் துாய்மைப் பணியாளர்கள் வீடுவீடாக சென்று குப்பை சேகரிக்கின்றனர். மேலும் குப்பையை பாதுகாப்பாக கொட்ட குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் குப்பையைஒழுங்கின்றி தெருக்கள் ஓரம் வீசிச் செல்லும் வகையில் குப்பை பாதிப்பு இடங்களாக 386 இடங்களை மாநகராட்சி அடையாளம் கண்டுள்ளது. அங்கு குப்பையை கொட்டுவோரை கண்காணிக்க துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு குப்பை பாதிப்பு இடங்களை குறைக்கும் முயற்சியில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளது.
நகர்நல அலுவலர் இந்திரா கூறியதாவது: துாய்மை மாநகராட்சியாக உருவாக்கும் நோக்கத்தில் குப்பையை உரிய நேரத்திற்குள் அகற்றுவதில் கமிஷனர் தினேஷ்குமார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார். வார்டுகளில் பல இடங்களில் குப்பையை தொட்டிக்குள் கொட்டுவதில் மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. 386 இடங்களின் எண்ணிக்கை விரைவில் குறைக்கப்படும். மாநகராட்சி பகுதியில் காய்ச்சல் பரவலும் தடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய கணக்கெடுப்பு படி 13 பேர் மட்டுமே பாதித்துள்ளனர் என்றார்.

