ADDED : அக் 12, 2025 05:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அனுப்பானடி தீயணைப்பு நிலையத்தில் 'வாங்க கற்றுக் கொள்வோம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெங்கட்ரமணன் தலைமை வகித்தார்.
விபத்து இல்லா தீபாவளி, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது, மின்சாரம், காஸ் சிலிண்டர் தீ விபத்திலிருந்து பாதுகாப்பாக இருத்தல், வாகன தீ விபத்தை கையாள்வது, தீயணைப்பு கருவிகள் பயன்பாடு குறித்து பேசினார்.
நிலைய அலுவலர் அசோக்குமார், பள்ளி மாணவர்கள், தொழிற்சாலை பணியாளர்கள் பங்கேற்றனர்.