நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: காடுபட்டி அருகே தாமோதரன்பட்டியில் ராஜாமணிக்கு 65, சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது. இங்கு நேற்று மதியம் திடீரென தீப்பிடித்ததில் பண்ணையின் தகர செட்டு முழுவதும் சரிந்து விழுந்தது.
பண்ணையில் இருந்த ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான கோழித் தீவனங்கள் எரிந்து சாம்பலாயின. சோழவந்தான் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். பண்ணையில் கோழிகள் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

