/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சட்டவிரோத ஆலையில் பட்டாசுகள் பறிமுதல்
/
சட்டவிரோத ஆலையில் பட்டாசுகள் பறிமுதல்
ADDED : ஜன 31, 2024 01:18 AM

பேரையூர்:மதுரை மாவட்டம் பேரையூர் அருகே தரிசு நிலங்களில் அரசு அனுமதி இன்றி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும் நில உரிமையாளர், ஊழியர்கள் தப்பி ஓடினர்.
பேரையூர் தாலுகா முருகனேரியில் செங்குளத்தைச் சேர்ந்த தெய்வமுனி மற்றும் வரதராஜூ ஆகியோருக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் கருவேல மரங்கள் முளைத்து காடாக காட்சியளிக்கிறது.
இந்த நிலத்தில் நான்கு மாதங்களாக அரசு அனுமதி இன்றிபட்டாசுகள் தயாரித்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
பேரையூர் டி.எஸ்.பி., இலக்கியா மற்றும் போலீசார் அங்கு சென்றபோது பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் தப்பி ஓடினர்.
அங்கிருந்த வெடி மருந்து மற்றும் பேன்சி ரக பட்டாசுகளை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நில உரிமையாளர்களை தேடுகின்றனர்.
இதே பகுதியில் கடந்தாண்டு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.