தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆடு திருடியதாக ஐவர் பிடிபட்டனர்

ஆடு திருடியதாக ஐவர் பிடிபட்டனர்

ஆடு திருடியதாக ஐவர் பிடிபட்டனர்


UPDATED : ஆக 31, 2026 10:26 PM

ADDED : ஆக 31, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2026 10:26 PM ADDED : ஆக 31, 2026 09:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

எழுமலை:எழுமலை அருகே மானூத்து பாறைப்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஜெயக்கொடி , -மரகதம் தம்பதியர். ஊருக்கு சற்று தள்ளி உள்ள தோட்டத்தில் ஆடுகள் வளர்த்து வருகின்றனர். நேற்று பகல் 4:00 மணியளவில் ஆட்டோவில் வந்தவர்கள், இவர்களது தோட்டத்தில் தனியாக நின்றிருந்த ஆட்டை திருடிக்கொண்டு உசிலம்பட்டியை நோக்கி வந்தனர்.

அருகில் இருந்தவர்கள் பார்த்து வழியில் இருந்த கிராமங்களில் உள்ளவர்களுக்கு தகவல் கொடுத்தனர். பாறைப்பட்டியை தாண்டி ஆட்டோசெல்ல முயன்றபோது கிராம மக்கள் மடக்கிப்பிடித்தனர். ஆட்டை திருடிச் செல்ல முயன்ற உசிலம்பட்டி மாதரை கிராமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் 35, பிரேம்குமார் 25, செல்லப்பாண்டி 35, அஜித்பாண்டி 30,மற்றும் உசிலம்பட்டியைச் சேர்ந்த சுந்தர் 48, ஆகிய ஐந்து பேரையும் பிடித்து எழுமலை போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் வந்த ஆட்டோ, திருடி வந்த ஆடு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். எழுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us