ADDED : ஆக 31, 2026 09:44 PM

அ நிறம் | அளவு
கொட்டாம்பட்டி: லெக்கடி பட்டியில் சின்ன குட்டு, பெரிய குட்டு மலையும், மலையின் மறு புறம் வெள்ளமலை பட்டி, பள்ளபட்டி, தொந்தலிங்கபுரம் உள்ளிட்ட மலைகளும் உள்ளது. இதில் சின்ன மற்றும் பெரிய குட்டு மலையில் நேற்று இரவு 8:00 மணிக்கு திடீரென தீப்பற்றியது. காற்று வீசியதால் வேகமாக பரவிய தீயால், மலையில் உள்ள மூலிகை மற்றும் அரியவகை மரங்கள் தீயில் கருகின.
தீயணைப்பு துறையினர் மலையின் உச்சியில் தீப்பற்றி எரிந்ததால் தண்ணீரை கொண்டு அணைக்க முடியாமல் அப்பகுதி இளைஞர்களுடன் சேர்ந்து செடிகள், தாவரங்களைக் கொண்டு கொண்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைத்து வருகின்றனர். தீக்கட்டுக்கடங்காமல் பரவுவதால் தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
