/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஐந்து சதவீத உள் இட ஒதுக்கீடு; குலாலர் சங்கம் வலியுறுத்தல்
/
ஐந்து சதவீத உள் இட ஒதுக்கீடு; குலாலர் சங்கம் வலியுறுத்தல்
ஐந்து சதவீத உள் இட ஒதுக்கீடு; குலாலர் சங்கம் வலியுறுத்தல்
ஐந்து சதவீத உள் இட ஒதுக்கீடு; குலாலர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : பிப் 05, 2024 12:26 AM

திருப்பரங்குன்றம் : மண்பாண்ட தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் அகில இந்திய குலாலர் முன்னேற்ற அமைப்பு சாரா மண்பாண்டம் செங்கல் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் மாநில மாநாடு நடந்தது. நிறுவன தலைவர் தியாகராஜன் திருநீலகண்டர் தலைமை வகித்தார். மாநில தொழிற்சங்க தலைவர் கருப்பசாமி, மாநில நிர்வாகி ராமலிங்கம், மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
கதர் கிராம தொழில்வாரிய மதுரை மண்டல இயக்குனர் அசோகன், உதவி இயக்குனர் அன்புச் செழியன், மாவட்ட தொழில் மைய இணை இயக்குனர் கணேசன், யூனியன் வங்கி விளாச்சேரி கிளை மேலாளர் சரவணபிரகாஷ் பேசினர். நிர்வாகிகள் அங்காள ஈஸ்வரி, செல்வி, ராக்கு, கோவிந்தராஜ், சாத்தையா பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் விடுபட்ட மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.
குலாலர் சமுதாய மண்பாண்டம், செங்கல் தொழிலாளர்களுக்கு தடையின்றி கண்மாய், ஏரி, குளம் ஆற்றுப்படுகையில் களிமண் எடுக்க அரசு உத்தரவு வழங்க வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் மண்பாண்ட தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு 5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

