ADDED : அக் 12, 2025 04:20 AM
வாடிப்பட்டி : பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழா அக்.,7ல் செவ்வாய் சாட்டுதலுடன் துவங்கியது.
அக்.14 அம்மன் ஆபரண பெட்டி புறப்பாடு, கோயிலில் வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றம் இரவு 10:30 மணிக்கு மேல் நடக்கிறது. அன்று பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்குவர். அக்.21 பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், வைகை ஆற்றில் இருந்து அக்னிசட்டி, கரகம், 22ல் அய்யனார் கோயிலில் பொங்கல் வைத்தல், குதிரை எடுப்பு பால்குடம், 23ல் கருப்பண்ண சுவாமி கோயில் முளைப்பாரி எடுத்தல் நடக்கிறது.
25ம் தேதி மதியம் 3:00 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி நகர்வலம் நடக்கும். விழா நாட்களில் தினமும் இரவு கிராமிய நாடகம், பட்டிமன்றம், சொற்பொழிவு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை மண்டகபடிதாரர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர்.