ADDED : ஏப் 07, 2025 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை ஹார்விப்பட்டி எஸ்.ஆர்.வி.
நகர் கோல்கட்டா காளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. ஏப். 11ல் காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்தல், மாலையில் பூச்சட்டி எடுத்தல், அம்மன் ஊர்வலம் நடக்கிறது. ஏப். 12ல் முளைப்பாரி ஊர்வலம், ஏப்.13ல் அன்னதானம் நடக்கிறது