ADDED : மே 27, 2025 01:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நேற்று முன் தினம் (மே 25) நடந்தது.
இங்கு ஜூன் 2-ல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. நகரத்தார் பேரவை சார்பில் பூச்சொரிதல் விழா நடைபெறும். இந்தாண்டும் பக்தர்கள் பால்குடம், பூத்தட்டுடன் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர்.
அம்மனுக்கு 18 வகை அபிஷேகம் செய்யப்பட்டு பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டது.அம்மன் மின்னொளியில் நான்கு ரத வீதிகளிலும் பவனி வந்தார். நிர்வாக அதிகாரி இளமதி ஏற்பாடுகளை செய்தார்