ADDED : டிச 03, 2025 06:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கீழவளவு , சருகுவலையப்பட்டி வீராகாளியம்மன் கோயில் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பூத்தட்டு ஏந்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இரண்டு நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நேற்று முன்தினம் அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நேற்று காலை கோபூஜையும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பக்தர்கள் பூத்தட்டு ஏந்தி ஊர்வலமாக கோயிலுக்கு சென்று நேர்த்திகடன் செலுத்தினர். பக்தர்கள் கொண்டு சென்ற பூக்களால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் தேரில் எழுந்தருளி மந்தையில் இருந்து கோயிலுக்கு வந்தார். இதேபோல் சருகுவலையபட்டியிலும் பூத்தட்டு திருவிழா நடந்தது.

