ADDED : டிச 03, 2025 06:57 AM

மதுரை: பார்வையற்றோர் மறுவாழ்வு நலச்சங்க அமைப்பினர் நேற்று மதியம் 2:00 மணிக்கு மதுரை கலெக்டர் அலுவலக வாயில் முன்பு கேட்டைப் பூட்டி மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். அருகில் இருந்த கேட்டை திறந்து வழி ஏற்படுத்தினர்.
சங்கத்தின் தலைவர் குமார் கூறியதாவது: பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு திருப்பரங்குன்றம் தாலுகா கே.புதுப்பட்டியில் வீட்டுமனை ஒதுக்கப்பட்டு இருந்தது. தற்போது வேடர்புளியங்குளத்தில் இடம் மாற்றி ஒதுக்கீடு செய்வதாக தெரிவிக்கின்றனர். எங்களுக்கு தோப்பூர் பகுதியிலேயே இடம் ஒதுக்கி பட்டா வழங்க வேண்டும். புதிய இடத்தை நாங்கள் ஏற்க மாட்டோம். புதுப்பட்டியில் பட்டா தராவிடில் ஆதார், ரேஷன் கார்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அட்டையை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்போம் என்றனர். கலெக்டரிடம் மனு கொடுத்து கலைந்தனர்.

