நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: தனியாமங்கலம் மங்கள சுந்தரி அம்மன் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூத்தட்டு திருவிழா கொண்டாடப்பட்டது.
நேற்று பக்தர்கள் பூத்தட்டுகளை ஏந்தி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
அங்கு பக்தர்கள் கொண்டு சென்ற பூக்களை கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இன்று (ஏப். 15) கோயிலில் இருந்து மீண்டும் பக்தர்கள் பூக்களை ஏந்தி 2 கி.மீ., தொலைவில் உள்ள கொட்டக்குடியான் ஊருணியில் கரைக்கும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறும்.