நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலான தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா மார்ச் 29ல் நடைபெறும்.
அன்று மாலை 6:00 மணிக்கு அம்மன் மின் அலங்கார பூப்பல்லாக்கில் மீனாட்சி கோயில் கிழக்கு வாயிலில் புறப்பட்டு, அம்மன் சன்னதி தெரு, மாசிவீதிகள், யானைக்கல், வடக்கு, கீழ வெளி வீதிகள், காமராஜர் ரோடு வழியாக தெப்பக்குளம் கோயில் வந்து சேரும். பின்னர் அம்மனுக்கு பூச்சொரிதலும், தீபாராதனையும் நடைபெறும்.

