ADDED : நவ 23, 2025 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம் இலவச உணவு வழங்கப்படுகிறது.
தற்போது ஐயப்பன், முருக பக்தர்கள் அதிகம் வருகின்றனர். அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மாவட்ட யூனியன் சார்பில் நேற்று முதல் காலையில் அன்னதானம் வழங்கும் திட்டம் துவங்கியது.
மாவட்ட தலைவர் குருசாமி தலைமை வகித்தார். செயலாளர் பாலமுருகன், பொருளாளர் சின்னச்சாமி முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் விஸ்வநாதன், செயலாளர் அய்யப்பன் துவக்கி வைத்தனர்.
அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வன், பொம்ம தேவன், ராமையா குத்து விளக்கேற்றினர்.

