ADDED : நவ 23, 2025 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதிகளில் பனிப்பொழிவால் பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
இன்று (நவ.23) முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்தது. உசிலம்பட்டி பூ மார்க்கெட்டில் கிலோ ரூ. 1700க்கு விற்ற மல்லிகை ரூ.4500க்கு விற்பனையானது. கனகாம்பரம், காக்கரட்டான் ரூ.2000, முல்லை ரூ.1300, பிச்சி ரூ.1200க்கு விற்பனையானது. சம்மங்கி, பன்னீர் ரோஸ், பட்டன் ரோஸ் தலா ரூ.300, அரளி ரூ. 250, செவ்வந்தி விற்பனையானது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், விளைச்சல் குறைவால் கவலை அடைந்துள்ளனர்.

