ADDED : நவ 17, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கள்ளந்திரி சாஸ்தா முதியோர் இல்லத்தில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் மாவட்ட கிளை சார்பில், சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
தமிழ் மாநில அமைப்பு தலைவர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.மாவட்ட தலைவர் குருசாமி, பொருளாளர் சின்னசாமி, முகாம் அலுவலர் பாலமுருகன், இணை முகாம் அலுவலர்கள் சிவராஜன், சந்தனபெருமாள் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மண்டபத்தில், நவ., 22 முதல் அன்னதானம் வழங்க சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

