ADDED : அக் 16, 2024 05:16 AM
திருப்பரங்குன்றம் : மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி உணவியல் மற்றும் ஊட்டச்சத்துத் துறை சார்பில் உணவு பாதுகாப்பு குறித்த பயிற்சி பட்டறை நடந்தது.
கல்லுாரி தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். மாணவி பவித்ரா வரவேற்றார்.
மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பால்சாமி பேசினார்.
கலப்படம் கண்டறியும் சோதனைகள், உணவு பொருளில் செயற்கை நிறமூட்டிகள், உணவு கெடாமல் தடுக்கும் வேதிப்பொருட்கள் கண்டறிதல், சிறு உணவகங்களில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் எண்ணெய் பொருட்களை கண்டறிதல், புதிதாக தொழில் துவங்கும் மாணவருக்கு பாதுகாப்பு உரிமம் பெறுவது குறித்து விளக்கப்பட்டது.
உணவியல் துறை தலைவர் கோபி மணிவண்ணன், 'மாணவர்கள் சிறுதானிய, இயற்கை உணவுகளை எடுப்பதன் அவசியம்' குறித்து பேசினார். மாணவி அனுஷா நன்றி கூறினார். பேராசிரியர்கள் மகேஸ்வரி, சரஸ்வதி, அனிதாஸ்ரீ, சூரியபிரியா, உமா மகேஸ்வரி ஒருங்கிணைத்தனர்.