ADDED : ஏப் 15, 2025 06:32 AM
மதுரை: மதுரை கூடல்புதுாரில் மகாகவி பாரதி கவிதா மண்டலத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் பாரதி கால்பந்து கழகம் துவக்க விழாவும், சித்திரை முதல் நாள் கவியரங்கமும் நடந்தது.
கிளைத் தலைவர் கவிஞர் பேனா மனோகரன் தலைமை வகித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர் பெரியசாமி கிருஷ்ணகுமார் வரவேற்றார். காந்தி கிராமம் கிராமியப் பல்கலை தமிழ்த்துறை பேராசிரியர் ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். ஓய்வு எஸ்.பி., மோகன் துரைச்சாமி வாழ்த்தி பேசினார். திருநகர் ஆக்மி புட்பால் கிளப் இளம் விளையாட்டு வீரர் முகிலன் கால்பந்து கழகத்தைத் துவக்கி வைத்தார். லோகன்பாரதி, இலன்யாத்திரன் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் கவிஞர் செல்லா கவியரங்கத்தை துவக்கி வைத்தார்.
கவிஞர்கள் சாத்தன்குன்றன், தமிழ்சிவா, முத்தையா, சுந்தரபாண்டியன் கவிதை பாடினர். இலக்கிய விமர்சகர் முருகேசபாண்டியன், எழுத்தாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகக் குழு உறுப்பினர் சுந்தர் நன்றி கூறினார்.