/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஐந்தாவது ஆண்டாக மறுகால் பாயும் கண்மாய்
/
ஐந்தாவது ஆண்டாக மறுகால் பாயும் கண்மாய்
ADDED : ஜன 14, 2025 11:14 PM

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் பகுதி கண்மாய்களில் பெரிய கண்மாயான நிலையூர் கண்மாய் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மறுகால் பாய்கிறது.
வைகை அணையில் திறக்கப்படும் தண்ணீர் நிலையூர் கால்வாய்கள் வழியாக இக்கண்மாய் நிரம்பும். இக்கண்மாய் மூலம் 1200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்தாண்டு சமீபத்தில் வைகை ஆற்றுப்பகுதிகள், திருப்பரங்குன்றம் சுற்றிலும் பெய்த கன மழையால் நிலையூர் கால்வாயில் சில நாட்களாக மழைநீர் திறக்கப்பட்டுள்ளது.
இக்கண்மாய் நிரம்பி நேற்று மறுகால் பாய்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மறுகால் தண்ணீர் திருமங்கலம் பகுதி சொக்கனாம்பட்டி, சின்னகுளம், விடத்தக்குளம் உட்பட 10க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு செல்லும்.