/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முன்னாள் வணிகவரி அதிகாரிக்கு சிறை
/
முன்னாள் வணிகவரி அதிகாரிக்கு சிறை
ADDED : மார் 01, 2026 05:54 AM
கோழிக்கோடு: கேரளாவின் திருவனந்தபுரம் அருகே கரமனா பகுதியை சேர்ந்தவர் மோகனன். 2017ல் மலப்புரத்தில் வணிக வரித்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றினார். மலப்புரம் மேல்முரி பகுதி கட்டடம் தொடர்பான கணக்குகளை வணிகர் ஒருவர் சமர்ப்பித்தார்.
விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு மோகனன் உத்தரவிட்டிருந்தார். கட்டடம் கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி 3 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வணிகருக்கு உத்தரவிட்டார். அதை தவிர்க்க வணிகரிடம் மோகனன் லஞ்சம் கேட்டார். லஞ்சம் தர விரும்பாத வணிகர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அலுவலகத்தில் வணிகர் லஞ்சம் கொடுத்தபோது மோகனனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கோழிக்கோடு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. மோகனனுக்கு நான்கு ஆண்டு சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சிபு தாமஸ் உத்தரவிட்டார்.

