/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போதைப் பொருள் கடத்தல் தலைமையிடமான தமிழகம் முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு

ADDED : மார் 04, 2024 05:41 AM
சோழவந்தான்: 'போதைப் பொருட்கள் கடத்தலின் தலைமையிடமாக தமிழகம் திகழ்கிறது'' என, முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றம்சாட்டினார்.
சோழவந்தானில் புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. தெற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் மகேந்திரன், ஒன்றிய சேர்மன் மகாலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் அகிலா, ஒன்றிய செயலாளர்கள் காளிதாஸ், ராதாகிருஷ்ணன், ராஜா, நகர செயலாளர்கள் அசோக்குமார், முருகேசன் பங்கேற்றனர்.
முன்னாள் அமைச்சர் உதயகுமார் அன்னதானத்தை துவக்கி வைத்து பேசியதாவது : இந்தியாவில் கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. கடன் வாங்குவதில் முதன்மையான முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார்.
கஞ்சா, போதை வஸ்துகள் துவங்கி வாயில் நுழையாத பெயர்கள் கொண்ட ரசாயன போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்துவதில் தலைமையிடமாக தமிழகம் மாறி உள்ளது.
தமிழகத்திற்கு பட்ஜெட் போடும் அளவுக்கு ரூ.பல ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் கடத்தல், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திற்கான உரிமைகளை கொடுக்க வேண்டிய மத்திய அரசு மனமில்லாமல் உள்ளது.
அதைப் பெற்று தர வேண்டிய மாநில அரசு துாங்குகி்றது. மத்திய, மாநில அரசுகள் நமக்கு தேவையில்லை. லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அ.தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும் என்றார்.