/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'நாங்கள் நலமாக இல்லை' என முதல்வருக்கு பொதுமக்கள் பதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றசாட்டு

ADDED : மார் 08, 2024 01:17 AM
வாடிப்பட்டி: 'நீங்கள் நலமா என கேட்கும் முதல்வருக்கு நாங்கள் நலமாக இல்லை என பொதுமக்கள் பதில் கூறுகின்றனர்' என, முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
வாடிப்பட்டியில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்த நாளையொட்டி அன்னதானம் வழங்கும் விழா ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமையில் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், தமிழரசன், அமைப்புச் செயலாளர் மகேந்திரன், மாநில நிர்வாகி ராஜேஷ்கண்ணா, ஒன்றிய செயலாளர் கணேசன், பேரூர் செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர். நிர்வாகி மணிமாறன் வரவேற்றார்.
அன்னதானத்தை துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:
நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட 520 தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் லோக்சபா தேர்தலில் அளித்த 100 வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட முதல்வர் நீங்கள் நலமா என மக்களை கேட்கிறார்.
வாக்குறுதியை நிறைவேற்ற கோரி போராடும் ஆசிரியர்கள் மட்டுமின்றி, அ.தி.மு.க., அரசின் திட்டங்களை ரத்து செய்ததால் விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் என எல்லோரும் முதல்வரின் நீங்கள் நலமா என்ற கேள்விக்கு 'நாங்கள் நலம் இல்லை' என சொல்கின்றனர்.
பத்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் இலக்கை கடந்து 25 லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கியுள்ளோம். நாங்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கவில்லை என அமைச்சர் மூர்த்தி பேசியது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக உள்ளது.
மக்களை வஞ்சிக்கும் அரசாக மத்திய, மாநில அரசுகள் உள்ளன. மற்ற கட்சி வேட்பாளர்கள் யார் என்பதை விட இரட்டை இலையை வெற்றி பெற செய்வது தான் எங்கள் இலக்கு, என்றார்.