/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரைக்கு முதல்வர் அறிவித்த திட்டங்கள் கானல் நீரானது : முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு

ADDED : ஜன 25, 2024 05:22 AM
மதுரை: 'மெட்ரோ ரயில் திட்டம், டைட்டல் பார்க், தொழில் பூங்கா என மதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டம் எல்லாம் கானல் நீராக உள்ளது. பெரும் தொழிற்சாலைக்கு காட்டும் அக்கறையை சிறு,குறு தொழிற்சாலைகளுக்கும் காட்ட வேண்டும்' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: கருணாநிதி பெயரில் ஒரு நுாலகமும், ஒரு விளையாட்டு மைதானத்தையும் திறப்பதற்கு காட்டிய அக்கறையை, முதல்வர் அறிவித்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கும், அதேபோல் எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் காட்டி இருக்கலாம்.
மதுரையிலே டைட்டல் பார்க் அறிவித்து அதில் பத்தாயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என முதல்வர் அறிவித்தார்.
அது கானல் நீராக காட்சி தருகிறது. தொழில் வளர்ச்சியில் மதுரை மாவட்டத்தை முன்னிறுத்தி புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்றும் சொன்னார். அதுவும் கேள்விக்குறியாக இருக்கிறது.
மின் கட்டணம் உயர்வால் சிறு, குறு தொழில்கள் நசிந்து வருகின்றன. தமிழ்நாட்டில் எங்கு இருக்கின்றன என தேடவேண்டியுள்ளது. மதுரை சிறையை புறநகருக்கு மாற்றி பசுமை பகுதியாக மாற்றப்படும் என்று சொன்னார்கள். அதுவும் கானல் நீராக உள்ளது. விளம்பரம் தேடுவதில் காட்டும் அக்கறையை அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும், அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் முதல்வர் அக்கறை காட்ட வேண்டும். இவ்வாறு கூறினார்.