/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'வீடு தேடி ரேஷன் பொருள் வரல வெள்ளம்தான் வருது முதல்வரே' ; முன்னாள் அமைச்சர் உதயகுமார் கிண்டல்

ADDED : அக் 27, 2025 03:59 AM
மதுரை: தாயுமானவர் திட்டத்தில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வருவதில்லை; வீடுதேடி வெள்ளம்தான் வருகிறது. இத்திட்டம் தேர்தலுக்காக கொண்டுவரப்பட்டது, என, மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் புதிய திட்டங்களை அறிவித்து பெயர் சூட்டுவதிலேயே முதல்வர் ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார். ஆனால் திட்டப்பலன்கள் மக்களுக்கு போய் சேருகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
சமீபத்தில் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார். எந்த கட்டமைப்பும் ஏற்படுத்தாமல் அவசரமாக அறிவித்து 70 வயது முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றார்.
ஆனால் பல்வேறு காரணங்களை சொல்லி முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர் என்பதுதான் உண்மை நிலவரம். இந்த திட்டத்தில் யாருமே முழுமையாக பயனடையவில்லை. களநிலவரம் என்ன என்று தெரியாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார்.
தேர்தலில் ஓட்டுக்களை பெறுவதற்காக தி.மு.க., அரசு இதுபோன்ற திட்டங்களை அறிவித்து ஏமாற்றும் செயலில் ஈடுபடுவது மக்களை வேதனையடைய செய்கிறது. திட்டத்திற்கு பெயர் சூட்டினால் மட்டும் போதாது, அந்த திட்டம் செயல்படுகிறதா என கண்காணிப்பதும் அரசின் கடமை. வீடு தேடி மருத்துவம், வீடு தேடி ரேஷன் பொருட்கள் என்றனர். ஆனால் தற்போது மழைக்காலத்தில் வீடுதேடி வெள்ளம்தான் வருகிறது என்றார்.