ADDED : ஜன 06, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, ;மதுரை காமராஜர் ரோடுசெல்லம் சரஸ்வதி மஹாலில்,மஹாலட்சுமி அறக்கட்டளை சார்பில் 9வது ஆண்டாக 'மக்களோடு மஹாலட்சுமி' என்ற மக்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை (ஜன.7) காலை 10:00 மணிக்கு நடக்கிறது.
பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் மஹாலட்சுமி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மணிவண்ணன், ராமகிருஷ்ணன், நடிகர் பரணி, சுகந்தி சாம்பிராணி நிர்வாக இயக்குனர் ஜீயர்பாபு, பி.டி.ஆர்., கல்லுாரி சேர்மன் தனவேலன், மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி தலைவர் ராஜகோபால் நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

