ADDED : மே 18, 2025 03:02 AM
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தின் காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் 15வது பட்டமளிப்பு விழா நடந்தது. கல்வி அலுவலர் நடராஜன் வரவேற்றார். செயலாளர்நந்தாராவ் தலைமை வகித்தார். முதல்வர் தேவதாஸ் யோகா சிறப்புகள் குறித்து பேசினார்.
அழகப்பா பல்கலை துணைவேந்தர் ரவி பட்டங்களை வழங்கி பேசுகையில், ''காந்தி இளைஞர்களுக்கு வலியுறுத்திய உண்மை, அகிம்சை, சேவை, எளிமையை கடைப்பிடிக்க வேண்டும். புத்திசாலியான இரக்கமுள்ள வலிமையான மக்கள் தான் இந்தியாவுக்கு தற்போது தேவைப்படுகின்றனர்.
நாட்டுக்கு சேவை செய்வதுதான் தேசபக்தியின் அடையாளம்'' என்றார்.
மதுரை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை வாழ்வியல் துறைத்தலைவர் நாகராணி நாச்சியார் பேசுகையில், ''பெண்கள் எதிர்கொள்கின்ற மன, உடல் ரீதியான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக யோகா இருக்கிறது. சுகப்பிரசவத்துக்கும் துணைசெய்கிறது'' என்றார்.
மதுரை காமராஜ் பல்கலை வேதியியல் புலம், பொருள் அறிவியல் துறைத்தலைவர் அன்னராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். யோகா ஆசிரியை கலாதேவி தொகுத்து வழங்கினார். விக்ரம் செவிலியர் கல்லுாரி துணை முதல்வர் பொன்மணி நன்றி கூறினார்.