UPDATED : அக் 22, 2026 07:11 PM
ADDED : அக் 22, 2026 07:07 PM
மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119 வது ஜெயந்தி விழா அவரின் ஆய்வு இருக்கை சார்பில் கொண்டாடப்பட்டது.
பதிவாளர் (பொறுப்பு) முத்தையா தலைமை வகித்தார். ஆய்விருக்கை இயக்குநர் கருப்பதேவன் வரவேற்றார். உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், 'மருது பாண்டியரின் வீரமும், தேவரின் பொது வாழ்வும்' என்ற தலைப்பில் பேசுகையில், வெள்ளையரை எதிர்த்து முதலில் ஆயுதம் ஏந்தி போராடியவர்கள் மருது பாண்டியர்கள். தமிழகத்தில் இருந்த குற்றப்பரம்பரை சட்டத்தை நீக்க முத்துராமலிங்கத் தேவர் கடுமையாக பாடுபட்டார் என்றார்.
முன்னாள் பேராசிரியர் ராஜாராம் உள்ளிட்டோர் பேசினர். முன்னாள் பேராசிரியர் ஜெயக்கொடி தொகுத்து வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. துணை இயக்குநர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
