UPDATED : அக் 22, 2026 07:11 PM
ADDED : அக் 22, 2026 07:07 PM

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவு வாயிலில் எஸ்.ஆர்.எம்.யூ., ஓடும் தொழிலாளர் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் ரவிசங்கர் தலைமை வகித்தார். செயலாளர் அழகுராஜா முன்னிலை வகித்தார். கோட்டச் செயலாளர் ரபீக், உதவி செயலாளர் ராம்குமார் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
கார்டு இல்லாமல் சரக்கு ரயில்களை இயக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மூடுபனி பாதுகாப்பு சாதனத்தை உதவி ஓட்டுநர்கள் சுமப்பதை தவிர்க்கும் வகையில் இன்ஜினிலேயே பொருத்த வேண்டும். சரக்கு ரயில் ஓட்டுநரை 48 மணி நேரத்தில் தலைமையகம் கொண்டுவரும் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும். அவசரகால பணி அனுமதிச் சீட்டை மற்ற கோட்டங்கள் போன்று முன்பதிவு கவுன்டர்களிலேயே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலுயுறுத்தப்பட்டன.
உதவி கோட்டச் செயலாளர்கள் முத்துக்குமார், கருப்பையா, நித்யராஜ், லெனின் உட்பட ஊழியர்கள் பங்கேற்றனர்.
