/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கோரக்பூரில் ஏ.பி.வி.பி., மாநாடு சோகோ நிறுவனர் பங்கேற்பார்
/
கோரக்பூரில் ஏ.பி.வி.பி., மாநாடு சோகோ நிறுவனர் பங்கேற்பார்
கோரக்பூரில் ஏ.பி.வி.பி., மாநாடு சோகோ நிறுவனர் பங்கேற்பார்
கோரக்பூரில் ஏ.பி.வி.பி., மாநாடு சோகோ நிறுவனர் பங்கேற்பார்
ADDED : நவ 18, 2024 06:36 AM
மதுரை : உ.பி., மாநிலம் கோரக்பூரில் நவ.,22ல் துவங்கி 3 நாட்கள் நடைபெறும் ஏ.பி.வி.பி., மாநாட்டில் தமிழகத்தின் சோகோ நிறுவன சி.இ.ஓ., ஸ்ரீதர்வேம்பு மாணவ பிரதிநிதிகளிடையே உரையாற்ற உள்ளதாக அந்த அமைப்பின் தென் தமிழக மாநில இணை செயலாளர் விஜயராகவன் கூறியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது:
ஏ.பி.வி.பி., அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்து வருகிறது. பாரத பண்பாட்டை போதித்து மாணவர்களிடையே தலைமை பண்பு ஏற்படுத்த ஆண்டுதோறும் தேசிய அளவில் மாநாடு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகிறது.
இந்தாண்டு 70வது அகில பாரத மாநாடு உ.பி., மாநிலம் கோரக்பூரில் நவ.,22 முதல் 24 வரை நடக்க உள்ளது. இம் மாநாட்டில் கல்வி பிரச்னைகள், விவாதங்கள், முக்கிய தீர்மானங்கள், சேவை பணிகளில் சிறந்து விளங்கியோருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.
மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 15 மாநில பொறுப்பாளர்கள் உட்பட எல்லா மாநிலங்களில் இருந்தும் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தின் முக்கியமான கல்வி பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. தென்காசி மாவட்டம் சோகோ நிறுவன சி.இ.ஓ., ஸ்ரீதர் வேம்பு தலைமை விருந்தினராக பங்கேற்று, மாணவ பிரதிநிதிகளிடம் உரையாற்ற உள்ளார்.
இந்திய தொழில்நுட்ப வளர்ச்சியை முன்னேற்றுதல், கிராம வளர்ச்சியை ஊக்குவித்தல், கல்வி அமைப்பில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களைக் கொண்டுவருதல் போன்றவற்றில் வேம்புவின் முயற்சிகள் நாட்டின் இளைஞர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாக விளங்குகிறது. எனவே, ஸ்ரீதர் வேம்பு பங்கேற்பது இளைஞர்களுக்கு வழிகாட்டுதல், உத்வேகத்தை வழங்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.