ADDED : மார் 02, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மேலஅனுப்பானடி கேட்லாக் ரோடு ரமேஷ் 35. நேற்றுமுன்தினம் இரவு அப்பகுதியில் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காமராஜர்புரம் பகவதி 18, மற்றும் 17 வயது சிறுவர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.
தெப்பக்குளம் போலீசார் கூறியதாவது:
ரமேஷ் மீது அடிதடி, திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளன. 2 ஆண்டுகளுக்கு முன் கேட்லாக் ரோட்டில் கருப்பையா என்பவரின் தலையில் கல்லை போட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதன் காரணமாக கருப்பையாவின் 17 வயது மகன், ஆத்திரமுற்று அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டி வந்த நிலையில் நேற்றுமுன்தினம் வெட்டிக்கொலை செய்தனர். 4 பேரையும் கைது செய்துள்ளோம் என்றனர்.

