UPDATED : நவ 08, 2026 05:25 PM
ADDED : நவ 08, 2026 05:12 PM

மேலுார்: மதுரை மாவட்டம் மேலுார் அருகே நடந்த பைக்குகள் மோதிய 2 விபத்துகளில் தந்தை மகன் உட்பட நால்வர் பலியாகினர்.
மதுரை அருகே உத்தங்குடியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 45, தனியார் தொழிற்சாலை ஊழியர். இவரது மகன் லோகேஷ் 24, சென்னையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்தார். இருவரும் இன்று (நவ.,8) அதிகாலை புலிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழகர் கோவில் ரோட்டில் சென்றனர். லோகேஷ் டூவீலரை ஓட்னார்.
அதே ரோட்டில் மற்றொரு டூவீலரில் சண்முகநாதபுரம் நவீன்குமார் 22, எதிரே வந்தார். அய்யர்பட்டி அருகே இரண்டு டூவீலர்களும் மோதியதில் மூவரும் இறந்தனர். மேலுார் டி.எஸ்.பி., சிவகுமார், இன்ஸ்பெக்டர் சரவணன் விசாரிக்கின்றனர்.
மற்றொருவர் பலி
மேலுார் அருகே மேலவளவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் 36, இவரது உறவினர் சண்முகத்தை 50, டூ வீலரில் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றார். மற்றொரு டூவீலரில் பல்லவராயன் பட்டி கண்ணன் 50, அய்யர்பட்டியில் உள்ள தனது வயலில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார்.
பழைய சுக்காம்பட்டி பகுதியில் 2 டூவீலர்களும் மோதின. இதில் டூ வீலரை ஓட்டிய செந்தில்குமார் இறந்தார். மற்ற இருவரும் காயத்துடன் மேலுார், மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
