இல்லத்தரசிகளே 50 சதவீதம் மானியத்தில் மாடித்தோட்ட ‘கிட்’
இல்லத்தரசிகளே 50 சதவீதம் மானியத்தில் மாடித்தோட்ட ‘கிட்’
UPDATED : நவ 08, 2026 05:12 PM
ADDED : நவ 08, 2026 05:06 PM

திருப்பரங்குன்றம்: மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தில் செயல்படுத்தப்படும் ‘வெற்றி இல்லத்தரசி வீட்டுத்தோட்டம்’ திட்டத்தில் ஐநுாறு மாடித்தோட்ட ‘கிட்’கள் திருப்பரங்குன்றம் வட்டாரத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு தொகுப்பில் 6 செடி வளர்ப்பு பைகள், 6 கிலோ தென்னை நார் கழிவு கட்டிகள், 6 வகை விதைகள், உயிர் உரங்கள், செயல்முறை கையேடு, மண்புழுஉரம் வழங்கப்படுகின்றன. மொத்த விலை ரூ. 1,450. இதில் 50 சதவீதம் அரசு மானியம். பயனாளி செலுத்த வேண்டியது ரூ. 725. ஒரு பயனாளி 2 தொகுப்புகள் பெறலாம்.
மொட்டை மாடியில் நிழல் வலைக்குடில் அமைக்க விரும்புவோருக்கு குறைந்த பட்சம் 100 சதுரடி சொந்த வீடு அல்லது குத்தகை வீடு வேண்டும். விலை ரூ.7ஆயிரம். இதில் 50 சதவீதம் அரசு மானியம். எனவே செலுத்த வேண்டியது ரூ. 3,500. இப்பயனாளிகள் தளிர் கீரைகள் தொகுப்பை பெறலாம்.
விருப்பமுள்ளோர் ஆதார் அட்டை நகல்/முகவரி ஆதாரம்/ அடையாள அட்டை/ ஏதேனும் ஒன்று, பாஸ்போர்ட் போட்டோ இரண்டு ஆகியவற்றுடன் திருப்பரங்குன்றம் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். விவரங்களுக்கு, ‘உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஆறுமுகம் (99941 41379), பேபி ஷாலினியை (63691 48798) தொடர்பு கொள்ளலாம் என உதவி இயக்குனர் திவ்யா தெரிவித்தார்
