/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வங்கி மோசடியில் நால்வருக்கு தண்டனை
/
வங்கி மோசடியில் நால்வருக்கு தண்டனை
ADDED : ஜூன் 06, 2025 02:56 AM

மதுரை: திருச்சியில் ஒரு தேசியமயமாக்ககப்பட்ட வங்கி கிளை மேலாளர் ரவிச்சந்திரன். 2011-12 ல் போலி ஆவணம் பயன்படுத்தி 73 மகளிர் சுயஉதவி குழுவினருக்கு ரூ.4 கோடி வரை வங்கி கடன் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக, ரவிச்சந்திரன், தொண்டு நிறுவன செயலாளர் ராஜாராம் உள்ளிட்ட சிலர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. மதுரை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
ரவிச்சந்திரனுக்கு ரூ.21 லட்சம், ராஜாராமுக்கு ரூ.2 கோடியே 63 லட்சம் அபராதம், தலா 7 ஆண்டு சிறை, தொண்டு நிறுவன ஊழியர்கள் கல்பனா,லாவண்யாவுக்கு தலா ரூ.11 லட்சம் அபராதம், தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை, தொண்டு நிறுவனத்திற்கு ரூ.27 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி சண்முகவேல் உத்தரவிட்டார்.